Skip to main content

ஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

செய்தியாளர்களுக்கு தீனி போடுவதில் பாஜக ஹெச்.ராஜாவினையும், மு.க.அழகிரியையும் யாரும் அவ்வளவு எளிதில் முந்திவிட முடியாது. அந்தளவிற்கு புகைச்சலை உருவாக்கும் வண்ணம் செய்தி கொடுத்த வண்ணமிருப்பவர்கள். அந்த இருவருமே ஒன்று சேர்ந்தால்..?

 

mk azhagiri meets h raja

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருக்கின்றது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் இல்லம். இன்று அவரது இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ஹெச்.ராஜாவுடன் தனியறையில் ரகசிய சந்திப்பை நடத்திவிட்டு வெளியில் வரும்போது அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களை சந்தித்தவர்., " இந்த வாரத்தினில் ஹெச்.ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. என்னால் அந்த திருமணத்திற்கு வர இயலாது என்பதால் முன்கூட்டியே வந்து செல்கின்றேன்." என்றவரிடம் "திமுகப் பொதுக்குழு கூடும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியவத்துவம் பெறுகின்ற வகையில் உள்ளதே.?" என கேள்வி எழுப்பப்பட, " திமுகப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்..? நான் திமுகவிலேயே இல்லை.. ஆளை விடுங்கப்பா" எனக் கூறிக்கொண்டே நகர்ந்தார்  அவர்.

உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கின்ற சூழலில் மு.க.அழகிரி - ஹெச்.ராஜா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்