Published on 10/03/2018 | Edited on 10/03/2018

மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் இன்று காலை 11.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.