நாளை சந்திர கிரகணம்
பூமி, சூரியன், சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. முழு, பகுதி மற்றும் வளையம் என்று மூன்று வகை சந்திர கிரகணங்கள் நிகழும். அரிய வான் நிகழ்வான சந்திரகிரகணம் நாளை (7ம் தேதி) நிகழவுள்ளது.
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 10 மணி நேரம் நடை அடைக்கப்பட உள்ளது. இதையடுத்து பக்தர்கள் சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்ய முடியும்.