கடந்த நவம்பர் 16 ஆம் தேதி கொளத்தூர் நகைகடையில், 3.5 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் மதுரவாயில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொள்ளப்பட்டார். இந்த வழக்கில் கொள்ளையர் கும்பல் தலைவன் நாதுராம் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டபோதும், முதலில் ஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது கொள்ளையன் நாதுராம் என்று செய்திகள் வெளியான போதும் அதில் சில சந்தேகம் தோன்றியது பின், உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் மீது சந்தேகம் எழுந்தபோதும் அதை மறுத்துவந்த போலீஸ்சார், பின்னர் நாதுராம் சிக்கியதும் தாம் சுடவில்லை என்று வாக்குமூலம் அளித்தான். இந்தநிலையில், ஆய்வாளர் முனிசேகரே பெரியபாண்டியன் மனைவி பானுரேக்காவிடம் நான் தான் தவறுதலாக சுட்டேன், என் மனசாட்சிபடி மன்னிப்பு கேட்கிறேன் என்றார். இந்த தகவலையும் மறைத்த போலீஸ்சார் தற்போது வரை பெரியபாண்டியனை சுட்டது யாரென்று தெரியவில்லை என்று இருமாநில போலீசாரும் வழக்கை சுனக்கம் செய்துவருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை அண்ணாநகர் திருமங்கலம் 2வது அவன்யூவில் தேனியை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு சொந்தமான, ஏ.கே.எஸ் ஜுவல்லரி கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது, கடந்த மார்ச் 6 ஆம் தேதி காலை வழக்கம் போல கடையை திறந்தபோது, கடையில் எல்லா பொருட்களும் சிதறி கிடந்தது தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த 10 கிலோ தங்கநகைகளும், இரண்டாம் தளத்தில் இருந்த 5 கிலோ வெள்ளிப்பொருட்களும், வங்கியில் செலுத்த வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் அய்யப்பன் மற்றும் கடை ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்த போலீசார் முதற்கட்ட விசாரனையில் கடையின் பக்கத்து கட்டிடம் வழியே மாடிக்கு வந்த கொள்ளையர்கள் நகைகடையின் மொட்டைமாடி கதவை உடைத்து பின் வெல்டிங் மெஷின் மூலம் இரும்புகதவை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. வெல்டிங் மெஷின் பயன்படுத்த பக்கத்து கட்டிடத்தில் இருந்து மின்சாரம் எடுத்து பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது. மேலும் அறையில் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தி, அதன் சேமிப்பு ஹார்டு டிஸ்கையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த கொள்ள சம்பவம் தொடர்பாக போலீஸ்சார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை கே.கே நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஆற்காடு சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளியன்று அதிகாலையில் மர்மநபர்கள் சிலர் கடைக்குள் புகுந்து அடகு கடை அதிபர் துக்காராம் என்பவரை வெட்டி கொலை செய்துவிட்டு சுமார் இரண்டு கிலோ தங்கம் வரை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அதன் பிறகு அந்த கொலை வழக்கு சம்மந்தமாக பல்வேறு வகையான விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, ஒரு அடகு சீட்டு மட்டும் கிடைத்தது. அதனை துருப்பு சீட்டாக பயன்படுத்தி விசாரணை தீவிரமாக்கபட்ட சிறிது நாட்களிலே கோடம்பாக்கம் பள்ளி பிரச்சனையில் தி.நகர் துணை ஆனையர் மாற்றப்பட்டார்.
இதில் விசாரணை தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் வந்த துணை ஆனையர் விசாரணையில் மும்முரமாக இருந்தார். இந்நிலையில் கே.கே நகர் காவல்நிலையத்தில் க்ரைம் ஆய்வாளர் இல்லாத காரணத்தால் மீண்டும் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது, அதோடு போலீசார் அந்த வழக்கை ஓரங்கட்டி விட்டு வழக்கமாக தினசரி நடக்கும் குற்றசம்பவங்களை பின் தொடர ஆரம்பித்து விட்டனர். அதிக ஆர்வத்துடனும், துடிப்புடனும் செயல்பட்டு குற்றங்களை குறைத்து வந்த ஆய்வாளர்கள் பலர் தற்போது போக்குவரத்து புலனாய்வு மற்றும் காவல்துறையில் ஓரங்கட்டபட்ட பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.
காவல்துறையில் துடிப்புடன் செயல்படும் ஆய்வாளர்களை கண்டறிந்து அவர்களை சட்டம் ஒழுங்கு பிரிவுகளுக்கு மாற்றியமைத்து சீர்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற கண்டு பிடிக்கபடாமல் இருக்கும் கொலை வழக்கு, உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க முடியும், மேலும் கொள்ளையர்கள் ரயில் மற்றும் விமானம் மூலமாக தான் தப்பி செல்ல முடியும் சோதனையில் சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரனை நடத்த வேண்டும். மேலும் ஸ்கேன் செய்யும் போது சந்தேகிக்கும் படி அதிக அளவுள்ள நகைகள் இருப்பதை கண்டுபிடித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் உளவுத்துறை மூலம் வடமாநில கொள்ளையர்களையும் கண்காணிக்க வேண்டும் அப்போது தான் இது போன்ற குற்றங்கள் குறையும். சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னரை தொடர்பு கொண்டோம் பதில் கூற மறுத்துவிட்டார்.