Skip to main content

பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஐஐடி முன்பு முற்றுகை போராட்டம்

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

சென்னை ஐஐடியில் பாத்திமா லத்தீப் என்ற கேரளத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை வழக்கில் 3 பேராசிரியர்களுக்கு தொடர்பிருப்பதாக எழுந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக வியாழக்கிழமையில் இருந்து வெள்ளி, சனி, ஞாயிறு என இந்த நான்கு நாட்களும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

மூன்று நாட்கள் நேரடியாக ஐஐடி வளாகத்தில் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தினம் சம்பந்தப்பட்ட அந்த 3 பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.  இந்தநிலையில் விசாரணையானது நேற்று மாலை 3 மணியில் இருந்தே ஐஐடி வளாகத்தில் வைத்து விருந்தினர் விடுதியில் அந்த மூன்று பேராசிரியர்களிடமும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா மரணத்திற்க்கு தூண்டுதலாக இருந்த பேராசியர்களை கைது செய்ய வலியுறுத்தி ஐஐடி முற்றுகை போராட்டம் நடத்தினர்

சார்ந்த செய்திகள்