Skip to main content

ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தனர்? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி 

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

high court madurai bench land karur district collector

 

ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எழுப்பினர்.

 

கரூர் அருகே அந்தோணி கிராமத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் தேங்குகிறது. எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனக் கோரி இளங்கோவன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (29/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? கடமை தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? ஓராண்டாக அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது; அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும், நிலத்தை அளவீடு செய்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்