அரசு மருத்துவமனைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்: கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் பலர் காய்சல், சளி, கால் வலி உள்ளிட்ட பல்வேறு மர்ம நோய்களால் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளனர். இதில் டெங்கு, மலேரியா போன்ற விசகாய்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிர் இழந்தும் உள்ளனர். இந்த நிலையில் மர்ம நோய்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் நோய்களை கவனித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அரசு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று நோயை சரிசெய்து கொள்ள வேண்டும் என்று நகர, கிராம புறங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சில நாட்காளகவே அரசு மருத்துவமனைக்கே செல்கிறார்கள். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதர நிலையம் முதல் நகர, மாவட்ட மருத்துவமனைகள் வரை தினம்தோறும் காலை முதல் கூட்டம் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையை தேடி வரும் பொதுமக்கள் காலையிலே கூட்டத்தில் சிக்கி தள்ளு முள்ளளில் வரிசையில் நின்று சிகிச்சை பெற்றுகொள்ள குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ஆகிறது. எனவே இது போன்ற காலங்களில் மருத்துவ மனைகளில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.
அரசு மருத்துவ மனைகளில் ஒரு நாளைக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மருத்தவர் 100 லிருந்து 150 நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கலாம். அதனையும் தாண்டி 500 முதல் 1000 வரை வந்தால் என்ன செய்வது. நாங்களும் மனிதர்கள் தானே என்று விரக்தி அடைகிறார்கள் மருத்துவர்கள். மேலும் இதற்கு ஒரு நல்ல ஏற்பாட்டை அரசு தான் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
காளிதாஸ்