கஜா புயல் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்க தொடங்கியது. மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வீசியதில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பெரிய பெரிய மங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சுமார் ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சார வாரியத்தின் சப் ஸ்டேஷன் புயலால் முற்றிலும்
பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சரிந்ததால் மாவட்டம் முழுவதும் மின் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் 7 நாளில் இருந்து 10 நாள் வரை நீடிக்கும் என்று கூறுகிறார்கள். செல்போன் டவர்களே இல்லை. எந்தவித தொடர்பும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.
வாழை, கரும்பு, நெல், காய்கறிகள், பூ உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் நாசமாகின. தேக்கு, மா, கொய்யா, பலா, தென்னை போன்ற மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னமராவதி பகுதிகளில் 13 ஏக்கரில் பரியிரிட்டிருந்த வாழை மரங்கள், 450 மா மரங்கள், 10 ஏக்கர் கரும்பு தோட்டம் நாசமானது. 250க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது.