Published on 05/04/2021 | Edited on 05/04/2021

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரைகள் நேற்று நிறைவடைந்தது. நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கடந்த இரண்டு நாட்களாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை முதல் சில தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாகவும், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகிவந்தன. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சாஹூ, "தமிழகத்தில் நாளை 234 தொகுகிகளிலும் தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ரத்து என்று வெளியாகும் செய்திகளில் உண்மையல்ல" என அவர் தெரிவித்துள்ளார்.