தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட வாக்கு போடும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதால் எதற்கு என்று தெரியாமல் எதிர்க்கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்ட காரணத்தை கேட்டு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் தாசில்தார் கமல்ராஜ். ஆர்.டி.ஓ. கந்தசாமிஆகிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதோடு இச் சம்பவம் கேள்வி பட்டு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவ் மற்றும் எஸ்.பி.பாஸ்கரன் ஆகியோரும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து எதிர் கட்சியினரிடம் பேசி வருகிறார்கள்.
இருந்தாலும் வந்த 50 ஓட்டு பெட்டிகளை திறந்து காட்ட வேண்டும் என தொடர்ந்து எதிர் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர் ஒட்டு எண்ணிக்கை நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
.