Published on 26/05/2022 | Edited on 26/05/2022

இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில் தற்பொழுது அவர் ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு சென்றார். முன்னதாக மோடியை சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை தமிழக ஆளுநர் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்க அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை வரவேற்றார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் பிரதமரை வரவேற்றார். முன்னாள் தமிழக பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் பிரதமரை வரவேற்க காத்திருந்தவர்களை பிரதமரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.