Skip to main content

’யாதும் ஊரே’திட்டம்! 5 நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயணம்

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

’யாதும் ஊரே’ திட்டத்தின் மூலம் வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்ட மிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.  இதற்காக அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 5 நாட்டு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.

 

e

 

புலம் பெயர்ந்த தமிழ் நாட்டு தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைக்க உள்ளார்.   இதன் மூலம் எரிசக்தி துறை, ஆட்டோ மொபைல் தகவல் தொழில் நுட்பம், மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் முதலீடுகள் பெருமளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் செல்ல உள்ளனர். இந்த மாதம் 28ம் தேதி இப்பயணம் தொடங்குகிறது.   மொத்தம் 14 நாட்கள் சுற்றுப்பயணம் அமையவிருக்கிறது.  இதற்கான சுற்றுப் பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்.

சார்ந்த செய்திகள்