Skip to main content

திருமணத்தில்  இ- மொய்!  மொய் மென் பொருள் சேவை மையங்கள்

Published on 21/10/2018 | Edited on 22/10/2018
மொ


ஒரு  காலத்தில் வீடுகளில்  விஷேங்கள்  என்றால் அந்த வீடுகளுக்கு சென்று செய்முறை பணத்தை  கையில் கொடுத்து விட்டு வருவதை ஒரு பழக்கமாக வைத்து வந்தனர்.  
அதன் பின்  காலப் போக்கில் தான் காதுகுத்து, பூப்புனித நீராட்டு, திருமணம் போன்ற விஷங்களுக்கு செய்ய கூடிய செய் முறைகளை நோட்டில் எழுதி வர தொடங்கினார்கள்.  இந்த நடை முறை தற்பொழுது வரை கடைபிடித்து வந்தாலும் கூட காலத்துக்கு ஏற்ப நடைமுறையும் வசதி படைத்த மக்கள் மாற்றி கொண்டு தான் வருகிறார்கள்.
  ஆம் திருமணம் போன்ற விஷங்களுக்கு செய்முறையை நோட்டில் எழுதுவதற்கு பதிலாக கம்ப்யூட்டர் போட்டு அதன் மூலம்  செய்முறையான "மொய்" வசூலித்து வருகிறார்கள்.


     இந்த நடைமுறை மற்ற மாவட்டங்களை விட  தென் மாவட்டங்களில்  தான் பெரும் பாலும் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.  அதிலும் மதுரை, தேனி திண்டுக்கல்  மாவட்டத்தில் கம்ப்யூட்டர் மூலம் மொய் வாங்குவதை அதிகமாகவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.  இதற்காக உசிலம்பட்டியில் பலர் மொய் மென் பொருள்  சேவை மையம் வைத்து கம்பியூட்டர்களையும், ஆட்களையும் தயார் நிலையில் வைத்து இருக்கிறார்கள்.   

 

mo

 

இப்படி பட்ட மொய் மென் பொருள் சேவை மையத்தில்  சொன்னால் போதும் உடனே விஷேங்களில் கலந்து கொண்டு மொய் வாங்கி கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொடுத்து விட்டு போய் விடுவார்கள்.


        அதுபோல் தான் கடந்த 19ம் தேதி திண்டுக்கல்லில்  பைனான்ஸ் உரிமையாளர்  செல்லப்பாண்டியின் இல்லத் திருமணம் விழா  நடை பெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  கலந்து கொண்டு மணமக்களான திருச்செல்வம்-மோனிஷாவை வாழ்தினார்கள்.  அதன் பின் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள்  கம்பியூட்டர் மூலம் மொய் வைத்து விட்டு  சென்றனர்.

 

mo


       இதுபற்றி உசிலம்பட்டியில் இருந்து வந்த மொய் மென் பொருள் சேவை மையத்தை சேர்ந்த ராஜா மற்றும்  ரமேஷ்சிடம் கேட்டபோது.... திருணத்திற்கு எப்படி  மண்டபம் பிடிக்கிறமோ? அது போல் எங்களிடமும் திருமணம் பத்திரிக்கையை கொடுத்து புக் பண்ணிவிட்டு அட்வான்ஸ் கொடுத்து விட்டு போய்விட்டால் நாங்களே திருமணத்தன்று  மண்டபத்துக்கு வந்து விடுவோம் அங்கு திருமணம் நடத்த கூடிய மணமக்கள் வீட்டாரிடம் எத்தனை  டேபிள் போட வேண்டும் என கேட்டு  அதன் படி போட்டு திருமணத்திற்கு வந்த மக்களிடம் மொய் வாங்குவோம்.    


  இப்படி ஒவ்வொரு வரும் கொடுக்கும் மொய் பணத்திற்கு ஊர், பெயர், அட்ரசுடன் அவர்கள் கொடுத்த பணத்திற்கு கம்பியூட்டர் மூலம் ரசீது கொடுத்து விடுவோம்.  இதே மொய்யை நோட்டில் எழுதினார்கள் என்றால் ரசீதும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இதில் மொய் வைத்த ரசீதின் ஒரிஜினல் நகல்  ரசீதே கொடுத்து விடுவோம்.  அந்த அளவுக்கு  இந்த கம்பியூட்டர்மூலம்  மொய் வாங்குவதுபொது மக்களுக்கு  பயன் உள்ளதாக  இருக்கும்.அதோடு விஷேச வீட்டாருக்கும்  நாங்கள் கம்பியூட்டரில் பென் டிரைவ் .மற்றும் சிடி போட்டு கொடுத்து விடுவோம் . அதோடு ஊர் வாரியாக பிரிண்ட் போட்டு  ஒரு நோட்டு மாதிரியும்  கொடுத்து விடுவோம். இதன் மூலம் இந்த விஷேஷக்காரர் அடுத்து மற்றவங்களுக்கு மொய் வைக்க வேண்டும் என்றால்  நோட்டில் ஒவ்வொரு பக்கமாக திருப்புவது போல் திருப்ப தேவையில்லை.

 

 ஊர் பெயரை பார்த்தவுடனே அந்த பக்கத்தை திருப்பினாலே ஊருடன் பெயர் மற்றும் மொய் எவ்வளவு என்று  உடனே கண்டு பிடித்து விடலாம். அந்த அளவுக்கு  ஈசியாக பார்த்து கொள்ளலாம். அதனாலயே பல ஊர்களில் இருந்து விஷேசம் வைப்பவர்கள் எங்களை புக் பண்ணி விடுகிறார்கள் .  அதுனால திருமணம் மண்டபம் பிடிப்பது போல் எங்களுக்கும் கிராக்கி வந்து விடும் . அதுனால முன் கூட்டியே சொல்லும் விஷேங்களுக்கு அட்வான்ஸ் படி பேசி இமொய் வாங்கி கொடுத்து வருகிறோம்.   இதில் ஒரு டேபிளுக்கு மூன்றாயிரம் மட்டும் தான் பீஸ் வாங்குகிறோம். எங்களை போல் உசிலம்பட்டி, தேனி போன்ற பகுதிகளில் பலர் மொய் மென் பொருள் சேவை மையம் பலர் வைத்து  இருக்கிறார்கள்  என்று  கூறினார்கள்.
  ஆக காலத்திற்கு ஏற்றவாரு நோட்டில் எழுத கூடிய மொய் வரவும் கம்ப்யூட்டர் மூலம் வளர்ச்சி  அடைந்து வருகிறது.


 

சார்ந்த செய்திகள்