கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 10-வது ஐசிஐசிஐ வங்கியின் கிளை சின்னசேலத்தில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் அவர்கள் பங்கேற்று திறந்து வைத்தார்.
இந்தியா முழுவதும் 6200 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது ஐசிஐசிஐ வங்கி. தமிழ்நாட்டில் மட்டும் 598 வங்கி கிளைகள் செயல்பட்டு வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி சின்னசேலம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சின்ன சேலத்தில் வங்கி கிளை ஒன்று திறக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பங்கேற்று குத்துவிளக்கேற்றி புதிய வங்கிக் கிளையை திறந்து வைத்தார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பேசுகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் இந்த வங்கி கடனுதவி அளித்து வந்துள்ளது. வங்கி கிளை திறப்பு விழாவின் போது ரூ 10 லட்சம் கடன் உதவி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சின்னசேலம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வியாபாரிகள், அரசு மானியம் சார்ந்து கடனுதவி பெறுபவர்கள் இந்த வங்கி மூலம் பயன்பெறலாம். அடித்தட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள சரியான முறையில் கடன் உதவி பெற்று அதை திரும்ப செலுத்தினால் மேலும் மேலும் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதுடன் வியாபார அபிவிருத்தி பெருகும் மற்றும் தொழில் அபிவிருத்தி விரிவடையும் என பேசினார்.