திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
சங்கம் பல்வேறு நபர்களால் பல்வேறு காரணங்களால் செயலற்ற தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ்த் திரைப்படங்கள் எந்தவித பிரச்சனையுமின்றி தியேட்டரில் வெளிவர தயாரிப்பாளர் சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கு சுயநலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம். அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் கேட்ட பிறகே முடிவெடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.