
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பழனி முருகன் கோயிலில் பக்தர்களை நிர்வாகம் இன்று (03/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இணையவழி முன்பதிவு அனுமதிச்சீட்டு உள்ளோர் மட்டுமே பழனி மலைக்கோயிலில் அனுமதிக்கப்படுவர். இணையவழி பதிவு செய்யாதவர்கள் நேரில் வந்தால் பதிவு செய்தவர்கள் வராத பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம்.
பழனி கோயிலில் ஜூலை 5- ஆம் தேதி முதல் தினமும் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இணைய வசதியில்லாத சாதாரண கைபேசி வைத்துள்ளோர் 04545-242683 என்ற எண்ணை தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்யலாம். தொலைபேசி எண்ணில் விதிகளுக்கு உட்பட்டு முன்பதிவு ஏற்கப்படும்; பக்தர்களுக்கு ஆதார் அட்டை அவசியம். பக்தர்கள், தேங்காய், பழம், பூ கொண்டு வர மற்றும் கால பூஜை, அபிஷேகத்தின் போது அமர்ந்து தரிசிக்க அனுமதி இல்லை. முகக்கவசம் உள்ளிட்ட அரசின் விதிகளுக்கு உட்பட்டு பழனி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1000 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர்." இவ்வாறு கோயில் நிர்வாகம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.