Skip to main content

மாரடைப்பால் கல்லூரி மாணவி ஹாஸ்டலில் மரணம்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
h a

 

கோவை அரசு கலைக்கல்லூரியில் BSC இரண்டாம் வருடம் பயின்று வரும் மாணவி ஹரிப்பிரியா.  இவர் சத்தியமங்கலத்தில் இருந்து கோவையில் கல்லூரியில் பயின்று வருகிறார் .  கல்லூரி அருகிலேயே ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்.  இவர் மிகுந்த தைரியசாலி.   படிப்பிலும் அதிக கெட்டித்தனம் அதிலும் நிறைய சுட்டித்தனம்.  அதுபோக விளையாட்டு  மற்றும் என்சிசி இது போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வமுடையவர். 

 

 இந்த நிலையில் கடந்த 17ம் தேதி கோவை அரசு கலைக் கல்லூரியில் இருந்து சரவணம்பட்டி அருகே ஒரு பிரபலமான தனியார் கல்லூரிக்கு என்சிசி பயிற்சிக்காக சென்றுள்ளார் .  என்சிசி பயிற்சியிலும் அனைத்துவிதமான திறமைகளையும் காட்டியிருக்கிறார்.  இப்படி இருக்க,  நேற்று முன் தினம் இரவு உணவு எல்லாம் அருந்திவிட்டு தனது சக தோழிகளோடு கேலியும் கிண்டலுமாய் விளையாடி சுட்டித்தனம் செய்துவிட்டு உறங்க சென்றிருக்கிறார். இரவு சரியாக 11 மணி 45 நிமிடங்கள் எட்டும் நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகிலிருந்த தோழியை எழுப்பி தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கூறிய ஹரிப்பிரியாவை கல்லூரி நிர்வாகத்தினர்  உடனடியாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் . அங்கு பரிசோதனை செய்த செய்த டாக்டர் ஹரிப்பிரியா இறந்த தகவலை கூறியிருக்கிறார்.  பின்பு சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

  சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் அவர்கள்  ஹரிப்பிரியாவின்  பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில்  மருத்துவமனைக்கு அலறியபடி ஓடி வந்தனர். ஹரிப்பிரியாவின் தாயும் தந்தையும் இறந்த துக்கத்தை தாங்கமால் கண்ணீர் விட்டபடியே நின்றிருந்தார். இதை கண்ட மருத்துவமனையே ஒரு நிமிடம் ஆடித்தான் போனது. பின்பு ஹரிப்பிரியாவின்  தந்தை பழனிச்சாமி அவர்களிடம் கேட்டபோது,  மிகுந்த துயரத்தோடு எப்பொழுதும் ஹரிப்பிரியா என் செல்ல மகள் அவள் இறந்த செய்தி கேட்டு ஒரு நொடி நானே துடி துடித்து போய்விட்டேன். பின்பு மருத்துவமனை வந்து கேட்டபொழுது அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது என்று மிகவும் வேதனையோடு கூறியிருக்கிறார். காலையில் ஓடியாடி தன்னோடு பேசிக்கொண்டிருந்த தன் தோழி இப்போது இல்லை என்ற தகவல் கேட்டு பழகிய அனைத்து தோழிகளும் கோவை அரசு மருத்துவமனையில் குழுமியிருந்தனர்.  பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஹரிப்பிரியாவின் உடல் சத்தியமங்கலம் எடுத்துச்செல்ல பட்டது.

சார்ந்த செய்திகள்