முதலிரவில் சைக்கோவான கணவன்!
புதுப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் கங்காதார நல்லூரை சேர்ந்த எம்.பி.பி.எஸ். படித்துள்ளவர் சைலஜா. இவருக்கும் வி. கோட்டாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிய கூடிய மேதரங்கபள்ளியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை காணிபாக்கம் விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பெண் வீட்டில் முதலிரவுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். முதலிரவுக்காக ராஜேஷ் உள்ள அறைக்கு சென்ற சைலஜா சில மணி நேரத்தில் அறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது சைலஜாவின் வாயில் துணியை வைத்து மூடி பிறப்புறுப்பு, மார்பகம் என உடலில் பல்வேறு இடங்களில் பிளைடால் ராஜேஷ் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சைலஜா அறையின் கதவை திறந்து கொண்டு வந்தார்.
பெற்றோர்கள் நடந்த விவரம் தெரியாமல் சமாதானப்படுத்திய நிலையில் திடிரென மயங்கி விழுந்தார். இதையடுத்து. உடனடியாக சைலஜாவை சித்தூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடூர மாப்பிள்ளையை உறவினர்கள் அடித்து ஜி.டி. நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரூ 60 லட்சம் செலவு செய்து திருமணம் செய்த நிலையில் தனது மகளை வாழ்கையை சீரழித்த ராஜேஷ் மீது நடுவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். சைலஜாவிற்கு மேல் சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜேஷ் அனைவரிடம் நல்ல முறையில் பழகி வந்த நிலையில் திடிரென எதற்காக இதுபோன்று சைக்கோ போல செய்தார் என்ற காரணங்கள் குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
- முகில்