Published on 01/10/2020 | Edited on 01/10/2020
செங்கல்பட்டு அரசு பேருந்து பணிமனையில் இருந்து இயங்க வேண்டிய 84 பேருந்துகளை இன்று இயக்காமல் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலைக்கு செல்வோரும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளானர்கள்.
ஊழியர்களின் போராட்டம் குறித்து கேட்டப்போது, ‘கரோனா காலத்தில் பொது போக்குவரத்துக்கு தடை விதித்திருந்ததால், அரசுக்கு வருமானம் இல்லை என்று ஊழியர்களுக்கு ஊதியக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகை பதிவேட்டில் முறைகேடாக விடுப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டத்தால் செங்கல்பட்டிலிருந்து சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் வெளியூர்கள் செல்லும் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், வேலைக்கு செல்வோரும் பொதுவாக வெளியே செல்வோரும் பெரும் அவதிக்குள்ளானர்கள்.