Published on 17/10/2020 | Edited on 17/10/2020
![bjp annamalai press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/1fwY3IgChJnNKdbEeg7SbU0v0Fbui9xQNns_f29g8cM/1602950140/sites/default/files/inline-images/ZcADADADEA_0.jpg)
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கொள்கையில் பாஜக உறுதியாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி ஒதுக்கீட்டில் தமிழக ஆளுநர் உரிய முடிவு எடுப்பார் என நம்புகிறேன்.
மேலும், அனைத்து இட ஒதுக்கீட்டிலும் மத்திய அரசு கை வைக்க முயன்றால் அதை என்னால் ஏற்க இயலாது எனவும் தெரிவித்தார்.