சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்ததில் தொடங்கிய பறவைக் காய்ச்சல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அதிவேகமாக பரவியது. இதனால் மாநில எல்லைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. தமிழக அரசும் கேரள எல்லைகளைக் கண்காணித்து, கேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கு தடை விதித்தது.
இந்நிலையில், பறவைக்காய்ச்சல் காரணமாக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு செல்வது தடைப்பட்டுள்ளதால் கறிக்கோழிகளின் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது.
அதன்படி, நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மேலும் 25 காசுகள் குறைந்து ரூபாய் 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூபாய் 6 குறைந்து ரூபாய் 72- க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.