Skip to main content

மக்கள் நலனுக்காக போட்டியிடுகிறேன்: எம்.ஜி.ஆர். அண்ணன் மகன்

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
மக்கள் நலனுக்காக போட்டியிடுகிறேன்: 
எம்.ஜி.ஆர். அண்ணன் மகன் 



எம்.ஜி.ஆர். அண்ணன் சக்கரபாணியின் மகன் எம்.சி.சந்திரசேகர். இவர் இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது நம்மிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி தற்போது பாழாகிக்கொண்டிருக்கிறது. அதனால் கட்சியை காப்பாற்ற இப்போது போட்டியிடுகிறோம். அண்ணா எம்ஜிஆர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பதிவு செய்துள்ளோம். கட்சியை ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறோம். இதுவரை தேர்தலில் நின்றதில்லை. நெடுஞ்செழியன் இருந்தபோது நால்வர் அணியில் எங்களது அண்ணன் பிரபாகரன் போட்டியிட்டார். தற்போது ஆர்.கே.நகரை யாரும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் நலனுக்காக போட்டியிடுகிறேன். வெற்றி பெற்றால் நல்லது செய்வோம். இல்லையென்றாலும் மக்கள் நலப் பணிகளை செய்வோம் என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்