கடந்த செப்டம்பர் மாதம், சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிமுக பேனர் விழுந்து, லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த விபத்துக்கு காரணமான முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜெய்கோபால் மற்றும் மேகநாதன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு ரூ.50,000 வழங்க வேண்டும் மற்றும் மதுரையில் தங்கி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயகோபாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய தொகையான ரூ.50,000 ஐ அடையாறு கேன்சர் மருத்துவமனை மற்றும் ஸ்டாலின் மருத்துவமனைக்கு தலா ரூ.25,000 ஆக பிரித்து தரவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல மேகநாதனனுக்கு தினமும் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.