திருப்பூர், ‘அப்துல் கலாம் இலட்சிய இந்தியா’ இயக்கம் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 90 வது பிறந்த வருடத்தை முன்னிட்டு தனித்திறனோடு சாதனை படைத்த 90 மாணவ, மாணவிகளுக்கு அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது 2021 வழங்கப்பட்டது. அதோடு சாதனைகள் படைத்த தாமதமாக பதிவு செய்து கலந்து கொண்ட 180 மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ. பொன்ராஜ் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், 2 வயது குழந்தைகள்முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் என தமிழ்நாட்டில் 14 மாவட்டத்தில் இருந்து மொத்தம் 900 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஜோதிடர் தமிழ்மணி, ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும், திருப்பூர் ரோட்டரி கிளப் ஆறுமுகம், ஜனா, சுலோச்சனா, புளியம்பட்டி ரோட்டரி கிளப், பல்லடம் பழனிச்சாமி, காவல் டுடே கோவிந்தராஜ், மற்றும் செல்வராஜ், வெற்றி செல்வன், திருப்பூர் ஆசிரியர் ஞானவேலன், நரேஷ் குமார், இளைஞர் அணி மதிவாணன் மற்றும் கல்லூரி மாணவிகள் இந்திராணி, சிநேகா, சங்கீதா, ப்ரீத்தி, காவ்யா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு துணைபுரிந்துள்ளனர்.