அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி:
விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
அரசியல் ஈடுபடுவது குறித்து விரைவாக அறிவிப்பு வெளியிடாததால் ரஜினி ரசிகர் ஒருவர் விரக்தியடைந்து விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பாறைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை என்ற ரஜினி புரூஸ்லி. இவர் தனது பகுதியில் ‘நாட்டுக்கொரு நல்லவன்’ என்ற பெயரில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், வசீகரன் என்ற மகனும் உள்ளனர்.
ரஜினியின் தீவிர ரசிகரான இவர், நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த தினமான டிசம்பர் 12 அன்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், விரக்தியடைந்த ஏழுமலை வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளார்.
இதையடுத்து, மயங்கி விழுந்த ஏழுமலையை அவரது குடும்பத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.