வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான மனுதாக்கல் ஜீலை 11ந்தேதி தொடங்கியது. ஜீலை 18ந்தேதி வரையென 7 நாட்கள் மனுதாக்கல் நடைபெற்றது. ஜீலை 18ந்தேதி மதியம் 3 மணியோடு மனுதாக்கல் நேரம் முடிந்தது. இதுவரை 50 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இதில் குறிப்பிடதக்கவர்கள். இந்த தேர்தலில் தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது. பிரதான கட்சிகள் எனப்பார்த்தால் திமுக கதிர் ஆனந்த், அதிமுக சின்னத்தில் ஏ.சி.சண்முகம் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஜீலை 19ந்தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், மனுக்கள் திரும்ப பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெறுவர். அதேபோல் இரண்டு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் ஒரு மனுவை வாபஸ் பெறுவர்.
அதன்பின் ஜீலை 22ந்தேதி மாலை வரை வேட்புமனுவை வாபஸ் பெறுபவர்கள் பெறலாம் என அறிவிப்புள்ளது. அதன்பின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடவுள்ளனர். ஆகஸ்ட் 5ந்தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.