Skip to main content

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி கொண்டு வருமாறு கோரிக்கை

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

 


பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி கொண்டு வருமாறு செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.  ஞானமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருப்பூர், ராமநாதபுரம், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. வரவேற்க்கிறோம். 

 

doctor


 

அதேநேரத்தில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரி வழங்கப்படும் என திமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசாவின் முயற்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையில் அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் அறிவித்தார். 
 

மருத்துவக் கல்லூரிக்கான நிலமும் குன்னத்திற்கு அருகில் முன்னாள் அமைச்சர் ஆ. இராசா அவர்களால் வாங்கிக்கொடுக்கப்பட்டது. 
 

இந்த நிலையில் ஆட்சி மாறியதும் மருத்துவக்கல்லூரி அதிமுக ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது. முதலில் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரியை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை. 
 

கலைஞர் அறிவித்தார் என்கிற ஒரேகாரணத்திற்க்காக பெரம்பலூர் -அரியலூருக்கு வர இருந்த மருத்துவக் கல்லூரியை ஆளும் அதிமுக அரசு தடுத்துவிட்டது. 


 

பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் வாகன விபத்து அதிகம் நடைபெறுகிறது. விபத்தில் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற போதுமான மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும். 
 

மேலும் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. 
 

இரண்டு மாவட்டத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சார்ந்தவர்கள். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசிகள். அப்படி இருந்தும் இரண்டு மாவட்டங்களுக்கும் மருத்துவக்கல்லூரி  வழங்க முயற்சி எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. 
 

பெரம்பலூர்- அரியலூர் மவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரியை உடனே வழங்க 4 சட்டமன்ற உறுப்பினர்களும் முயற்சி எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்