Published on 09/10/2020 | Edited on 09/10/2020
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை நியமித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் வருகிற 15ஆம் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 15ஆம் தேதிக்கு பிறகு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதில், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குறைந்தப்பட்சம் ராஜாங்க அந்தஸ்துள்ள (Minister of state) அமைச்சராக வாய்ப்பிருக்கிறது.
இது அ.தி.மு.க.வை முழுமையாக பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வரும் ஒரு முயற்சி. ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி கிடைப்பதற்கு நோ அப்ஜக்ஷன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். ஓ.பி.எஸ். மகன் அமைச்சராவது பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை உறுதிபடுத்திவிடும் என்கிறார்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள்.