நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் மத்தியில் தக்க வைத்து கொண்டது. மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று இன்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது, தமிழகம் சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
கூட்டம் முடிந்த பின்பு துணை முதல்வர் பன்னீர்செல்வம் முக்கிய மத்திய அமைச்சர்களையும், பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது பற்றி விசாரித்த போது சமீப காலமாக அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிமாகி உள்ளது என்று கூறுகின்றனர். கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடிக்கே முக்கியத்துவம் தருவதாகவும், தனக்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை என்று ஓபிஎஸ் தரப்பு பாஜகவிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒற்றைத்தலைமை என்றால் அதிமுகவிற்கு பன்னீர் செல்வம்தான் தலைவராக இருப்பார் என்றும், அதற்காக சில வேலைகளை பாஜகவின் உதவியோடு செய்து வருகிறார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜெயலலிதா இருக்கும் போதே எனக்கு தான் முதல்வர் பதவி தரப்பட்டது. ஆகையால் இப்போதும் எனக்கு தான் முதல்வர் பதவி தர வேண்டும் என்று பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து காய் நகர்த்தி வருவதாகவும், அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.