Skip to main content

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் மன்மோகன் சிங்?

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட்டுள்ளார். 
 

congress



மேலும் அடுத்த தலைவர் யாரை நியமிக்கலாம் என்று காங்கிரஸ் கமிட்டி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.  புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியில் தலையிடப் போவதில்லை என்று ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் கூறிவிட்டதால் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் சேர்ந்து கட்சித்தலைவருக்கு ஒரு சில பெயர்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சார்ந்த செய்திகள்