Skip to main content

ரஜினிகாந்தை எதிர்ப்பதற்கான சூழல் வருமா? கமல்ஹாசன் பேட்டி

Published on 04/04/2018 | Edited on 04/04/2018


 

Kamal Haassan


மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி புறப்பட்டார். 
 

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் கமல்ஹாசனுடன் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். 
 

கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க.வை எதிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள். அதேபோல், உங்களுடைய நண்பர் ரஜினிகாந்தையும் எதிர்ப்பதற்கான சூழல் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
 

பதில்:- ஏற்பட்டால் செய்யவேண்டியது தான். கொள்கை ரீதியாகவும், செயல் முறைகளை பார்த்தும் நான் எடுத்த முடிவு. அது வரும்போது பார்க்கலாம். கெட்டது தான் நடக்கும் என்று ஏன் யூகிக்க வேண்டும்? அப்படி ஏற்படாமல் இருந்தால் நல்லது. ஏற்பட்டால் நின்று செயல்படாமல் இருந்துவிட முடியுமா? இவ்வாறு அளித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"சட்டமன்ற தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்" -கமல்ஹாசன்

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

 

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதிமய்யத்தில் இணைந்தார். 

 

கட்சியில் இணைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபுவை மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளராக நியமித்தார் கமல்ஹாசன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் எனது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்படுகிறது. அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா? சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும். ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ரஜினியும், நானும் சினிமாவில் இருந்தபோதே போட்டியாளர்கள் தான்; பொறாமை இல்லை." என்றார்.

 

'பாரத் நெட்' விவகாரத்தில் அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

"தொரகா ரண்டி அன்னைய்யா..!" - கமல்ஹாசன் உருக்கம்!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
gtew

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல் நிலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர்  கமல்ஹாசன் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா" என கூறியுள்ளார்.