‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள எம்.பி கனிமொழி ஈரோடு மாவட்டத்தில் சென்ற இரண்டு நாட்களாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
1 -ஆம் தேதி காலை ஈரோட்டில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மரப்பாலம், பண்ணீர் செல்வம் பார்க் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்தார். பிறகு, ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நினைவகத்திற்கு வந்தவர், அந்த இல்லத்தில் ஒரு மணி நேரம் இருந்து தந்தை பெரியார் பிறந்த இடம், அண்ணா வசித்த அறை மற்றும் இரு தலைவர்களின் அரிய புகைப்படங்களைப் பார்வையிட்டார்.
பிறகு நம்மிடம் அவர் பேசும் போது "சுயமரியாதை இயக்கத்தின் பிறப்பிடம், தலைவர் கலைஞரின் குருகுலத்தை முதல் முறையாகப் பார்த்தேன். எனக்கு இது வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வு. இங்கிருந்துதான் தமிழ் இனத்தின் விடியல் தோன்றியது. இந்த மண்ணுக்கு வந்தது எனக்குக் கிடைத்த பெருமை" என்றார்.