Published on 01/08/2019 | Edited on 01/08/2019
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் திமுக சார்பாக 3 எம்.பி.களும், அதிமுக சார்பாக 3 எம்.பி.களும் பதவி ஏற்றனர். திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவிற்கு நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில் மதிமுக சார்பாக அக்கட்சியின் பொது செயலாளர் வைகோவிற்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் வைகோ ராஜ்யசபா எம்.பியாக பதவி ஏற்றார். மேலும் காங்கிரஸ் தரப்பில் வைகோ மேலே வருத்தம் இருப்பதா ஒரு தகவல் பரவியது.
இது பற்றி விசாரித்த போது, ராஜ்யசபா எம்.பி.யான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் ஸ்டாலினை சந்திச்சது போல, டெல்லியில் சோனியாவையும் ராகுலையும் சந்திப்பார்ங்கிற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தரப்பில் அதிகரிக்க, மாறாக வைகோ அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்ததோடு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் வீட்டிற்கும் போய் அஞ்சலி செலுத்தினார். 29-ந் தேதி இரவுவரை அவர் காங்கிரஸ் தரப்பில் யாரிடமும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கலையாம். இதனால் காங்கிரஸ் தலைமைக்கு வைகோ மீது சற்று வருத்தம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.