
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி.தினகரன், "அ.தி.மு.க.வில் அ.ம.மு.க. இணையும் என கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை. அ.ம.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தைத்தான் சசிகலா கூறியிருக்கிறார். சசிகலா தொடர்ந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வழக்கு வரும் மார்ச் 15- ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்குப் பின் என்ன நடவடிக்கை என்பது குறித்து சசிகலாவே பேசுவார்" என்றார்.
முன்னதாக, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்தநாளையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சசிகலா, டிடிவி. தினகரன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.