Published on 23/05/2019 | Edited on 23/05/2019
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/e_EmKu_GS2sfdhuW-10usZREzZd8YMSC43TpyIyxc2w/1558591533/sites/default/files/inline-images/1_105.jpg)
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி மிக மோசமான தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.தற்போதைய நிலவர படி மத்தியில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.இந்த நிலையில் ஜெயலலிதா இருக்கும் போது கடந்த 2014 தேர்தலில் 37 இடங்களை பெற்று இந்தியா அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.ஆனால் தற்போது திமுக இந்திய அளவில் தனி பெரும் கட்சியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.அதிமுக கட்சிக்கு இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.மேலும் தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.