Published on 23/02/2023 | Edited on 23/02/2023
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று (23.02.2023) உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக அமைந்ததால் அதனைக் கொண்டாடும் விதமாக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், எடப்பாடி பழனிசாமியின் பேனருக்கு பால் ஊற்றியும் கொண்டாடினர்.