இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் முதல்வர்
கோவா மாநிலம் பனாஜி தொகுதியில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவா மாநில முதல் அமைச்சராக பதவியேற்றார். பின்னர் பனாஜி நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அடுத்த வாரம் ராஜினாமா செய்வதாக மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.