கரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து 6 மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக உலக நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசி சோதனைகள் பரிசோதனையில் இருந்தாலும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் என்பது சில நாட்களாக விஸ்வரூபத்தில் இருந்து வருகின்றது. மேலும் ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வின் அடிப்படையில் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த ஆறு மாதங்களாக பூட்டப்பட்டிருந்த தாஜ்மஹால் தற்போது சுற்றுலா பயணிகள் பார்க்க திறக்கப்பட்டுள்ளது.