Published on 06/12/2018 | Edited on 06/12/2018
டிசம்பர் 6 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது இடிக்கப்பட்டதின் நினைவு தினத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் கொண்டாட உள்ளது. மேலும் அங்கு ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பேரணி நடத்த உள்ளது. இது பற்றி பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ராமர் வாழ்ந்த இடத்தில அவருக்கு இருந்த கோவிலை இடித்துவிட்டு பிற்காலத்தில் வந்த பாபருக்கு மசூதி கட்டியிருந்தார்கள். இதனை இடிக்க 4000 முதல் 5000 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். எனவே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இந்த தினத்தை கொண்டாடுவதில் தவறில்லை, ஆனால் அது அமைதியான முறையில் கொண்டாடப்பட வேண்டும் என கூறினார்.