பிரதமர் நரேந்திர மோடிநேற்று மேற்கு வங்கத்தில் உள்ள மித்னாப்பூர் என்னும் பகுதியில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது, கீழே மோடியின் பேச்சை கவனிக்க வந்த தொண்டர்கள் மற்றும் மக்கள் இருக்கும் பகுதியில் திடீரென மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் பல மக்கள் சிக்கிக்கொண்டு காயமடைந்தனர். மேடையில் பேசிக்கொண்டிருந்த மோடி, அந்த விபத்து நடந்தவுடன் தனது எஸ்பிஜி குழுவை சென்று மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க செய்யுங்கள் என்றார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் காயமடைந்த தொண்டர்களை பார்த்து நலம் விசாரித்தார்.
#WATCH PM Narendra Modi tears up while talking to one of the injured people in hospital. Several were injured after a portion of a tent collapsed during PM's rally in Midnapore earlier today. #WestBengal pic.twitter.com/04AOX9CJri
— ANI (@ANI) July 16, 2018
அப்போது மோடி காயமடைந்தவர் ஒருவரின் அருகில் சென்று தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்ல, பின்னர் கண்கலங்கினார். மேலும் இன்னொருவர் மோடியிடம் எனக்கு ஒரு ஆட்டோகிராப் போட்டுக்கொடுங்கள் என்று காயத்துடன் ஆசையாக கேட்க மோடியும் அவருக்கு ஆட்டோகிராப் போட்டுத்தந்தார்.