Skip to main content

குறைந்தப்பட்ச ஊதிய பிரச்சனையை கையில் எடுக்கும் தேசிய கட்சிகள் !

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒரே மாதிரி ஊதியமாக குறைந்தபட்ச ஊதியம் பெறும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் இதுவே குறைந்தப்பட்ச ஊதியமாகும். இதற்காக குறைந்தப்பட்ச ஊதிய சட்டம் -1948 திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும். இந்த சட்டத்தில் கல்வி தகுதியை மையமாக வைத்தே ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு 2019 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலத்துறை சார்பில் குறைப்பட்ச ஊதிய பட்டியலை வெளியிட்டது. 
 

minimum salary issues



இதில் தொழிலாளர்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவைகள் பின்வருமாறு Unskilled Workers, Semi Skilled Workers , Highly Skilled Workers , Skilled Wokers உள்ளிட்டவையாகும். இந்த வகை தொழிலாளர்களின் ஒரு நாள் குறைந்தப்பட்ச ஊதியம் ரூபாய் 450 முதல் 750 வரை வழங்க மத்திய தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் சட்டம் -1963 (Equal Pay For Equal Work Act - 1963)

சம வேலைக்கு சம ஊதியம் சட்டத்தை நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா? என்றால் கேள்வி குறித்தான். இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் குழுவை அமைத்து நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டும்.  இந்த குழுவை தொழிலாளர்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான்  சம வேலைக்கு சம ஊதியம் சட்டத்திற்கு உயிரூட்ட முடியும். மேலும் தொழிலாளர்களின் நலன் காக்க முடியும்.


குறைந்தப்பட்ச ஊதியத்தை ஏன் மாற்றியமைக்க வேண்டும் ?

இந்தியாவில் பெரும்பாலான படித்த இளைஞர்கள் பெறும் மாத ஊதியம் ரூபாய் 8,000 மட்டுமே. இதில் பொறியியல் படித்த இளைஞர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் , அப்படியே வேலை வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் மாத ஊதியம் குறைவாக உள்ளதால் தங்கள் குடும்பத்திற்கு தேவையானதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்நிறுவனங்களை கண்டு கொள்வதில்லை என்பது எவராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான அறிக்கையில் மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் குறைந்த பட்ச ஊதியத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அளித்து வருகின்றனர். அதே போல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே வேலை கிடைத்தாலும் மாத ஊதியம் குறைவு . எனவே அரசியல் கட்சிகள் இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு Minimum Wages Act - 1948-ல் திருத்தம் மேற்கொண்டு ஒவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற வேண்டும் என்பதே இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.


பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்