
மத்திய பிரதேசத்தில் தெருவோர விற்பனையாளரிடம் மக்காச்சோளம் விலை குறித்து மத்திய அமைச்சர் உரையாடியது பேசும் பொருளானது.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலஸ்ட்டே (Union minister of state for steel Faggan Singh Kulaste) இவர் சியோனி (Seoni) நகரில் இருந்து மாண்டலா (Mandla) செல்லும் வழியில் கிராம சாலையோரம் மக்காச்சோளம் விற்பனையாளரிடம் மூன்று மக்காச்சோளங்களை 45 ரூபாய்க்கு வாங்கினார். ஒரு மக்காச்சோளம் ரூபாய் 15 என்பது விலை அதிகமாக உள்ளதே என்று மத்திய அமைச்சர் கேட்க, எல்லோருக்கும் ஒரே விலைதான்; காரில் வருவோருக்கென விலையைக் கூட்டுவதில்லை என அந்த விற்பனையாளர் பதிலளித்தார்.
இது குறித்த காணொளியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்த மத்திய அமைச்சர், அனைவரும் நேரடியாக விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களிடம் உணவுத் தானியங்களை வாங்கினால், அவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்; நமக்கும் கலப்படமற்ற பொருட்கள் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
எனினும், மத்திய அமைச்சருக்கே, ஒரு மக்காச்சோளம் 15 ரூபாய் என்பது விலை அதிகம் என்றால், ஏழைகளின் நிலை என்ன? என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பினார்.
आज सिवनी से मंडला जाते हुए। स्थानीय भुट्टे का स्वाद लिया। हम सभी को अपने स्थानीय किसानों और छोटे दुकानदारों से खाद्य वस्तुओं को ख़रीदना चाहिए। जिससे उनको रोज़गार और हमको मिलावट रहित वस्तुएँ मिलेंगी। @MoRD_GoI @BJP4Mandla @BJP4MP pic.twitter.com/aNsLP2JOdU— Faggan Singh Kulaste (@fskulaste) July 21, 2022