Published on 04/07/2024 | Edited on 04/07/2024

குஜராத்தில் உள்ள பச்சாவ் பகுதியில் அதிகளவு சாராயம் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பச்சாவ் பகுதியில், சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, கிழக்கு கட்ச் போலீசார் உடனடியாக தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் போலீசார் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.
வாசகர்கள் சாய்ஸ்: 'சட்ட ஒழுங்கை காக்க திமுக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை' - எடப்பாடி கண்டனம்
இவர் கிழக்கு கட்ச் பகுதியின் காந்திதம் சி.ஐ.டி. காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். பின்பு காரில் இருந்த சாராயம் மற்றும் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார் யுவராஜ் சிங் மற்றும் நீடா சௌத்ரி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.