மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் தங்கள் வேட்பாளர்கள் தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நினையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில் டெல்லியில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோனி மற்றும் கம்பீரை பிரச்சாரத்துக்கு உபயோகிக்க பாஜக முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியான நிலையில், தற்போது கம்பீர் டெல்லியில் போட்டியிடலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்காக பஞ்சாப் மாநிலம் அமித்சரில் கம்பீர் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல சமீபகால அரசியலிலும், சமூக விஷயங்களுக்கு குரல் கொடுப்பது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனே கருத்து மோதல், பத்ம ஸ்ரீ விருது என கம்பீர் முழுவீச்சில்தான் காணப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.