Skip to main content

பாரதரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த பாபா ராம்தேவ்...

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

 

yhjng

 

பாபா ராம்தேவ் அடுத்த ஆண்டு சன்யாசி அல்லது துறவி ஒருவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 70 வது குடியரசு தின விழாவில் ராம்தேவ் பேசும்போது, 'கடந்த 70 ஆண்டுகளில் பாரத ரத்னா ஒரு சந்நியாசிக்கு கூட வழங்கப்பட்டதில்லை. மகரிஷி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் அல்லது சிவகுமார ஸ்வாமி, என யாருக்கும் இதுவரை பாரதரத்னா விருது வழங்கப்படவில்லை. எனவே அடுத்த வருடமாவது பாரத ரத்னா விருதை ஒரு சன்யாசிக்கு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்' என கூறினார். இந்த ஆண்டுக்கான பாரதரத்னா விருதை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புகழ்பெற்ற பாடகர் பூபேன் ஹசிகா மற்றும் இறந்த சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக் ஆகியோர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்கள் ஆடை குறித்த ராம்தேவின் பேச்சிற்கு வலுக்கும் கண்டனங்கள்

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

Ramdev's speech on women's clothing is strongly condemned

 

பாபா ராம்தேவ் பெண்களைப் பற்றிக் கூறிய கருத்துக்கு நாடெங்கும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. மேலும் பாபா ராம்தேவின் இக்கருத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.

 

நேற்று முன் தினம் புனேவில் நடந்த நிகழ்வில் பாபா ராம்தேவ், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராம்தேவ், “பெண்கள் புடவையிலும், சல்வாரிலும் அழகாக இருப்பார்கள். ஆடைகள் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்” எனக் கூறினார்.

 

இதற்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ‘பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

 

மராட்டிய மகளிர் ஆணையர் ரூபாலி சகாங்கர் அனுப்பிய நோட்டீசில் ‘பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையிலான உங்கள் பேச்சிற்கு எதிராக ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ் தனது கருத்து குறித்த விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் கமிஷன் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும் மேடையிலிருந்த துணை முதல்வரின் மனைவி மற்றும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

 


 

Next Story

"அவர்களது அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது" - வைரலாகும் பாபா ராம்தேவின் வீடியோ!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

BABA RAMDEV

 

பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான  அறிவியல் என்றதோடு, சிகிச்சை, ஆக்சிஜன் உள்ளிட்டவை கிடைக்காமல் இறந்தவர்களைவிட, நவீன மருத்துவ மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் என கூறினார். இது பெரும் சர்ச்சையானது. இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (indian medical association) ராம்தேவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும், ராம்தேவின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியது.

 

மேலும், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, நவீன மருத்தவ முறைகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ராம்தேவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நவீன மருத்துவ முறைகள் குறித்த உங்கள் கருத்து துரதிருஷ்டவசமானது என்றும் அதனைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.இதனையடுத்து ராம்தேவ், தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இந்த சர்ச்சையை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்தார். இதன்பிறகு ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கடிதத்தில் ராம்தேவ், அலோபதி மருத்துவம் உயர் இரத்த அழுத்தம், டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் அளிக்கிறதா? தைராய்டு, கீழ்வாதம், பெருங்குடல் அழற்சி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு நவீன மருந்தியல் துறையில் நிரந்தர சிகிச்சை உள்ளதா? என இந்திய மருத்துவக் கூட்டமைப்புக்கு 25 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

 

இந்தநிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு, தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்ட பிறகும் 10,000 மருத்துவர்கள் இறந்துவிட்டார்கள் என ராம்தேவ் பேசும் வீடியோவை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம்  எழுதினர். அதில் தடுப்பூசி குறித்த அச்சமூட்டும் செய்தியை பாபா ராம்தேவ் பரப்புதாகவும், அவர் தங்கள் நிறுவன தயாரிப்புகளின் நலனுக்காக மத்திய அரசின் சிகிச்சை நெறிமுறைகளை எதிர்ப்பதாகவும் எனவே அவர் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியிருந்தனர். அதன்தொடர்ச்சியாக ராம்தேவை கைது செய்யக்கோரி சமூகவலைதளங்களில் ஹஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகின.

 

இந்தநிலையில் பாபா ராம்தேவ் பேசும் புதிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், "எப்படியிருந்தாலும், அவர்களுடைய தந்தையால் கூட சுவாமி ராம்தேவை கைது செய்ய முடியாது. அவர்கள் ‘தக் ராம்தேவ் ’, மகாதக் ராம்தேவ்’, ‘கிராப்டர் ராம்தேவ்’ போன்ற ட்ரெண்டுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அதை செய்யட்டும். இதுபோன்ற ட்ரெண்டுகளை செய்ய மக்கள் பழகிவிட்டார்கள்" என கூறியுள்ளார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூகவலைதளங்களில் அவரை கைது செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.