Skip to main content

ஒமிக்ரான் அச்சம்: புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த மாநிலங்கள்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

corona

 

இந்தியாவில் சில மாநிலங்களில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் குறித்த அச்சமும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தற்போதுவரை 269 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் அச்சம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் சில மாநிலங்களிலும், நகரங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

அந்தவகையில் மும்பையில், பொதுவெளியில் 200 பேர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கும் அனுமதி வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமணமோ, அரசியல் கூட்டங்களோ அல்லது வேறு எந்தவகை கூட்டமோ அரங்கிற்குள் நடைபெற்றால், 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நடைபெறும் அனைத்து விதமான கூட்டங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் புத்தாண்டையொட்டி டிசம்பர் 30ஆம் தேதி முதல் 2ஆம் தேதிவரை பெரிய கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளப்கள் மற்றும் பப்களைப் பொறுத்தவரை, டிஜே இசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அபார்ட்மெண்ட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் டிஜே இசைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் பிரார்த்தனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேவாலயங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஹரியானாவில் ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், திருமண மண்டபம், ஹோட்டல், வங்கி, மால்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்