Published on 22/12/2022 | Edited on 22/12/2022

பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ஃபிளிப்கார்ட் நிறுவனத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள் சாய்ஸ்: பொங்கல் பரிசு - தமிழக அரசு தகவல்
சில வாரங்களுக்கு முன்பு டெல்லி துவாரகாவில் மூன்று பேர் அடங்கிய கும்பல் பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் சச்சின் அரோரா, ஹர்ஷித் அகர்வால், வீரேந்திர சிங் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பிரபல நிறுவனமான ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ஆசிட் வாங்கியது தெரிய வந்தது. இந்நிலையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.