ரூ 1 கோடி மதிப்பிற்கு பழய நோட்டுக்கள் வைத்திருந்த 6 பேர் கைது
ஹைதராபாத் காவல் துறையினர் ரூ 1 கோடி மதிப்பிற்கு பழய நோட்டுக்களை வைத்திருந்த 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் பலர் சிறு வணிகர்கள் ஆவர். ஒருவர் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியராவார். பழய நோட்டுக்களை மாற்றுவதற்கு இவர்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த 6 பேரில் ராஜ் குமார் பகாடி என்பவரின் வீட்டில் சோதனையிட்ட மத்திய மண்டல சிறப்பு காவல் படையினர் நோட்டுக்களை கைப்பற்றினர். முகவர் ஒருவர் மூலம் நோட்டுக்களை மாற்றுவதற்கு பகாடியின் வீட்டில் கூடியிருந்த போது கைது செய்யப்பட்டனர். கச்சிகுடா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.