சுற்றுச்சூழல் குறித்து பேசுவதே குற்றம் என்று கூறுவதை, ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான அங்கீகாரத்தினை முறையாக பதிவு செய்யும் பொருட்டு இன்று காலை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்ற கமல்ஹாசன், அங்கு அதிகாரிகளை சந்தித்து கட்சியை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தலைமை தேர்தல் அலுவலகத்தில் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சில கேள்விகள் இருந்தது. அதற்கான பதிலை தெரிவித்தேன். கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும். சின்னம் குறித்து நான் எதுவும் கேட்கவில்லை. கூடிய விரைவில் சின்னம் குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்து பின்னர் கேட்கப்படும்.
கவுதமிக்கான சம்பள பாக்கி கொடுக்கப்பட்டுவிட்டது. சம்பளம் கொடுக்காததை சொன்ன அவர், கொடுத்ததை சொல்லாமல் இருக்கிறார் அவ்வளவுதான்.
சுற்றுச்சூழல் குறித்து பேசுவதே குற்றம் என்று கூறுவதை, ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த ஆதங்கமும், அந்த கவலையும் அனைத்து குடிமகன்களுக்கும் இருக்கும். எனக்கும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.