தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''10, 11, 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் ஏற்கனவே படித்து நன்றாகத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். தமிழ்நாட்டு முதல்வர் சொல்வது போல இந்த வயது என்பது 'படிப்பு... படிப்பு... படிப்பு...' என அதில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய வயது. வேற எந்த ஒரு விஷயத்திற்கும் நமது நாட்டம் சென்றுவிடாமல் நீங்கள் கவனமாக நல்ல முறையில் படித்து நல்ல விதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாக வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்'' என்றார்.
தொடர்ந்து வெளியான பொதுத்தேர்வு கால அட்டவணையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 26/3/2024 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 19/2/2024 தொடங்குகிறது.11 ஆம் வகுப்பு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.23 ஆம் தேதி தொடங்கி பிப்.29 தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
தமிழ் - 26/03/2024
ஆங்கிலம் - 28/03/2024
கணிதம் - 01/04/2024
அறிவியல் - 04/04/2023
சமூக அறிவியல் - 08/04/2024
--------------------------------------------------------------------------
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மொழிப்பாடம்- 04/03/2024
ஆங்கிலம்- 07/03/2024
இயற்பியல்/பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்- 12/03/2024
கணினி அறிவியல்/ புள்ளியியல் - 14/03/2024
உயிரியல் /வணிக கணிதம் / வரலாறு - 18/03/2024
வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல்- 21/03/2024
--------------------------------------------------------------------------
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மொழிப்பாடம் - 01/03/2024
ஆங்கிலம் - 05/03/2024
கணினி அறிவியல்/ உயிரி அறிவியல்/ புள்ளியியல்- 08/03/2024
வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல்- 11/03/2024
இயற்பியல்/பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்- 15/03/2024
கணிதம்/ விலங்கியல்/நுண் உயிரியல்- 19/03/2024